Welcome to the homepage of Gandhi Kumarappa Trust.

We are a registered Trust operating in Tamil Nadu, India.  Our focus is to revive Gandhi's philosophy of Gram Swaraj and Kumarappa's Economy of Permanence.

As economic self-reliance is at the heart of Village Self-Rule, our first action plan is to promote rural industries that are small, non-violent, and create local in-situ  employment for rural people. 

As an initial step, we are organising a 3 day workshop on Rural Socially responsible Enterprises at Madurai (15- 17 May 2025). 

காந்தி  பெரிதும் விரும்பிய‌ கிராம சுவராஜ்ஜியத்திற்கு உழைப்பதற்கென காந்தி குமரப்பா அறக்கட்டளை உருவாக்கப் பட்டுள்ளது. கிராமம் தன்னாட்சி பெறுவதற்கு முதற்படி பொருளாதாரத் தன்னிறைவு.

இதற்கு கிராமங்களில் அண்மைத் தொழில்கள் ஏற்படுத்துவதும், தொழில்முனைவோரை உருவாக்குவதும், நகர‌த் தொழில்களின் சந்தையாக கிராமங்கள் மாறுவதை மீட்டெடுப்பதும் எல்லாம் உடனடித் தேவைகள்.

இதற்கு முதற்படியாக, கிராமிய அண்மைத் தொழில்கள் பற்றிய ஒரு மூன்று நாள் பயிலரங்கம் மதுரையில் நடத்தப்பட உள்ளது. (15- 17 மே 2025)

இதன் நோக்கம் கிராமிய அண்மைத் தொழில் முனைவோரைக் கண்டறிவதே. கிராமங்களில் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதும், கிராமத்தின் தேவைகளை அண்மையிலேயே உற்பத்தி செய்வதும், அத்தகைய தொழில்களைக் கண்டறிந்து செயல்படுத்தும் இளைய பாரதத்தை உருவாக்கி ஊக்குவிப்பதும் நம் அவா.